×

தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்துள்ளனர் – திமுக தலைவரின் டிவீட்டால் பரபரப்பு !

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்ட தகவல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் நேற்று வரை 9 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இதுவரை தமிழகத்தில் யாரும் உயிரிழக்கவில்ல. ஆனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்ட தனது டிவீட்டில் ‘தமிழகத்தில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழப்பு; 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்.’ எனக் கூறியிருந்தார்.

ஆனால் சர்ச்சைக்குரிய அந்த டிவீட் உடனடியாக டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் வேலுமணி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் இறந்ததாக திமுக தலைவர் ட்விட்டரில் வதந்தி பதிவு செய்து நீக்கியுள்ளது, பதற்றம் உண்டாக்கும் முயற்சியா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

சுகாதார பேரிடர் தகவல் பரிமாற்றத்தை குறிப்பாக தலைவர்கள் மிகவும் கவனமுடன் கையாள வேண்டும்!எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கொரோனா பற்றி தவறான தகவலைக் கூறியதாக நடிகர் ரஜினிகாந்தின் வீடியோவை டிவிட்டர் நிர்வாகமே நீக்கியது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News