×

நிர்பயா வழக்கு! தூக்கிலிருந்து தப்பிய 4 குற்றவாளிகள்

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தற்போது எஞ்சியுள்ள முகேஷ் சிங், அக்ஷய் குமார், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நான்கு குற்றவாளிகளும் மரண தண்டனையை எதிர்த்து மாறி மாறி மனுக்களை அளித்து வந்தனர்.
 

இதனால் ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தேதி தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நாளை (மார்ச் 3 ) 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதில் குற்றவாளியான பவன் குப்தா மரண தண்டனையை எதிர்த்து கருணை மனு ஒன்றை குடியரசு தலைவருக்கு அனுப்பியிருந்தார். இந்த வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நாளை தூக்கு தண்டனை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News