×

நிர்பயா குற்றவாளிகள் தண்டனை நிறைவேற்றம்… டீ சொல்லுங்க ராஜேந்திரன் – தெறி விஜய் பாணியில் கருத்து தெரிவித்த போலிஸ்!

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு பல தடைகளுக்குப் பின்னர் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து திருநெல்வேலி காவல் ஆய்வாளர் தெறி விஜய் பாணியில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

 

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக டெல்லியில் நள்ளிரவில் நிர்பயா கொல்லப்பட்டதை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து குற்றவாளிகளுக்கு 2017 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட முகேஷ்குமார், அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு இன்று பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு டெல்லி திகார் ஜெயிலில் இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தண்டனை நிறைவேற்றம் குறித்து ஆதரவுகளும் எதிர்ப்புகளும் உருவாகியுள்ள நிலையில் திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையர் அர்ஜூன் சரவணன் தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் ‘கடைசியாக .. டீ சொல்லுங்க ராஜேந்திரன்.’ எனத் தெரிவித்துள்ளார். தெறி படத்தில் இதேபோல பாலியல் குற்றவாளி ஒருவரைக் கொன்ற பின்னர் விஜய் சொல்லும் வசனம்தான் டீ சொல்லுங்க ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News