×

நிர்பயாவுக்கு கிடைச்சிடுச்சி.. பொள்ளாச்சிக்கு எப்போ? - நடிகர் கார்த்தி ஆவேசம்

2012ம் ஆண்டு பேருந்தில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த நிர்பயா வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கும் இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 

இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இறுதியாக 8 வருடங்களுக்கு பின் நிர்பயா வழக்கில் நியாயம் கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைக்க இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும். ஏற்கனவே ஒரு வருடம் ஆகிவிட்டது. நாம் கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கக் கூடாது. எப்போதும் பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

இதற்கு ‘பொள்ளாச்சி குற்றவாளிகள் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இதில் பெரிய மனிதர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்’ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News