Categories: Cinema News latest news throwback stories

முத்தக்காட்சியா? வேண்டாம்… கடைசி நேரத்தில் கமல்ஹாசனை டென்ஷன் ஆக்கிய நடிகை…

1988 ஆம் ஆண்டு கமல்ஹாசன், நிரோஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சூரசம்ஹாரம்”. இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்து இயக்கியிருந்தார்.

Soora Samhaaram

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு முத்தக்காட்சி இடம்பெற்றால் அந்த கதைக்கு நன்றாக இருக்கும் என படக்குழுவினர் நினைத்தனர். ஆதலால் அந்த காட்சியை படமாக்குவதற்காக நிரோஷாவிடம் அனுமதி கேட்டார் சித்ரா லட்சுமணன். அப்போது நிரோஷாவும் முத்தக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதற்கு அடுத்த நாள் அந்த முத்தக்காட்சியை படமாக்கத் தொடங்கினார்கள். படிக்கட்டுகளில் கமல்ஹாசனும் நிரோஷாவும் ஏறியவுடன் இருவரும் முத்தம் கொடுக்க வேண்டும். இதுதான் ஷாட். அதன்படி இருவரும் படிக்கட்டுகளில் ஏறினர். ஆனால் முத்தம் கொடுக்கப்போகும்போது நிரோஷா “இந்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்றாராம்.

Nirosha

ஏதோ தான் நிரோஷாவிடம் முத்தக்காட்சிக்கு அனுமதி வாங்காதது போல் கமல்ஹாசன் நினைத்துவிடுவாரோ என்று சித்ரா லட்சுமணனின் மனதில் எண்ணம் தோன்ற “முந்தைய நாள் இந்த காட்சியில் நடிப்பதாக ஒப்புதல் அளித்துவிட்டு திடீரென கடைசி நிமிடத்தில் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி?” என கேட்டாராம்.

Chitra Lakshmanan

ஆனால் நிரோஷா ஏதோ ஒரு தயக்கத்தால் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால் சித்ரா லட்சுமணனுக்கு நிரோஷா மீது மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டதாம். கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்கள் நிரோஷாவும் இயக்குனரும் பேசிக்கொள்ளவே இல்லையாம்.

Soora Samhaaram

எனினும் அதன் பின் ஒரு நாள் அந்த முத்தக்காட்சியை படமாக்கலாம் என கூறினாராம் நிரோஷா. சித்ரா லட்சுமணனும் சரி என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் அந்த முத்தக்காட்சி வேண்டாம் என கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க: வடிவேலுவை தொடர்ந்து ரெட் கார்டு வாங்கப்போகும் காமெடி நடிகர்?… என்னப்பா பிரச்சனை!

 

Arun Prasad
Published by
Arun Prasad