×

நிசமாவே ஒரு கோடிப்பே! வசூலை வாரிட்டாப்பா இந்த திரௌபதி...

50 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட படம், முதல்நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 

தமிழகம் முழுவதும் 330 திரையரங்குகளில் வெளியான திரௌபதி படத்திற்கு சென்னை நீங்கலாக பெரும்பாலான ஊர்களில் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி , தேனி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் குலுங்கின.

வட மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாய் படத்திற்கு செல்லும் திட்டத்துடன் திரையரங்குகளில் டிக்கெட்டுக்கள் மொத்தமாக முன்பதிவு செய்யப்படுவதால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மொத்தமே 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரௌபதி படம் முதல் நாளிலேயே ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதித்து இருப்பதாகவும் அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் திரையரங்குகளில் படம் திரையிடப்பட இருப்பதாகவும் படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News