ஹாரர் படத்துக்கு யெஸ் சொன்ன நித்யா மேனன்!

 
Nithya menen

'ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களில் நடித்து இளசுகளிடம் லைக்ஸை அள்ளியவர் நடிகை நித்யா மேனன்.

இவர் நடிப்பில் கடந்த 2025-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'தலைவன் தலைவி' படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமைந்தது.

தற்போது, நித்யா மேனன் நடிக்கப்போகும் புதிய ஹாரர் ஃபேன்டஸி படம் குறித்து தகவல் கிடைத்திருக்கிறது. இதை 'யாமிருக்க பயமே' புகழ் டிகே தான் இயக்கப்போகிறார்.

இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்கவுள்ளனர். படத்தை அடுத்த ஆண்டு (2027) சம்மரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From Around the web