நித்யா மேனன்
தமிழ் சினிமாவில் நாயகர்களும், நாயகிகளும் அடிக்கடி வைரல் ஸ்டேட்மெண்ட் விடுவதை வாடிக்கையாக்கி கொண்டுள்ளனர். அதில் சிலர் சர்ச்சையில் கூட சிக்கியுள்ளனர். இந்த வகையில் நித்யா மேனன் சொன்ன ஒரு விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நித்யா மேனன்
நித்யா மேனன், தனுஷுடன் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியாகிய திருச்சிற்றம்பலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நித்யா மேனனுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால், தாய்க்கிழவி பாடல் வரவேற்பை தொடர்ந்து தன்னை தாய்கிழவி என அழைக்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. அப்படி கூப்பிட வேண்டாம் என கூறியிருந்தார்.
நித்யா மேனன்
இந்நிலையில், இரு ஹீரோயின்கள் ஒரே படத்தில் நடிக்கும்போது, போட்டி பொறாமை ஏற்படுமா? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இரு நாயகிகள் ஒன்றாக நடிக்கும் போது நல்லா இருக்கும். சந்தோஷமாக பேசிக்கொள்வோம். ஆனால், போட்டி பொறாமை இருப்பது என்னவோ நாயகர்களுக்கு தான். இரு நடிகர்கள் இணைந்து நடிக்க மாட்டார்கள். நடித்தாலும் எனக்கு தான். உனக்கு தான் என சண்டை தான் போட்டு கொள்வார்கள் என தடாலடியாக கூறி இருக்கிறார். யாரமா சொல்றீங்க!
Vijay Devarakonda:…
Kantara Chapter…
STR49 :…
TVK Vijay:…
Vijay: தமிழ்…