சைலண்டா சம்பவம் செய்த மிஷ்கின்.... அதிக சம்பளம் கேட்ட நித்யா மேனன்!

 
nithya menon

பரிமளா அண்ட் கோ: 

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிமளா அண்ட் கோ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற ஜூன் 5-ம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனால் படகுழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயராம், ஊர்வசி, யோகி பாபு , மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

parimala and co

கதாபாத்திரங்கள் தேர்வு: 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாண்டியராஜன் படத்தின் அனுபவம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இந்த படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசியை விட்டால் வேறு யாரும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்க மாட்டார்கள்.

அப்படித்தான் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் நாங்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்தோம். அந்த கதாபாத்திரங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருந்தோம் .

சைலண்டா உள்ளே புகுந்த மிஷ்கின்;

vijay sethupathy nithya menon

ஆனால் அவர்கள் தான் அந்த திரைப்படத்திற்கு பொருத்தமாக இருப்பார்கள் என நாங்கள் நம்பினோம். அப்படித்தான் விஜய் சேதுபதி மற்றும் நித்தியா மேனன் இருவரும் இணைந்து தலைவன் தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தனர் .

அந்த திரைப்படத்தில் வித்யா மேனனை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதை அப்படியே ஓட்டுக் கேட்ட இயக்குனர் மிஷ்கின் நித்யா மேனனிடம் சென்று நீ இப்போ எவ்வளவு சம்பளம் கேட்டாலும் அவங்க குடுக்க தயாரா இருப்பாங்க... சம்பளம் அதிகமாக கேளு என ஏத்திவிட்டார். நித்யா மேனனும் அதேபோல் எங்களிடம் சம்பளத்தை அதிகமாக கேட்டு வாங்கி நடித்தார்.  இப்படித்தான் இயக்குனர் மிஷ்கின் உள்ளே புகுந்து வேலை செய்தார் என பாண்டிராஜ் சிரித்துக்கொண்டே கூறினார். 

Tags

From Around the web