கோலிவுட்டில் பல டாப் நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவர் பெரும்பாலும் வடிவேலு படங்களில் தான் நடித்துள்ளார். பாலாஜி அவரது காதல் மனைவி நித்யாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார்.
ஏராளமான படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான தாடி பாலாஜி நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தாடி பாலாஜி தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பாலாஜி, நிகழ்ச்சியில் தன்னை பற்றி நாள்தோறும் தவறாக பேசி வருவதாக அவரின் மனைவி நித்யா குற்றம் சாட்டி உள்ளார். மேலும் இதுகுறித்த தனது மகள் போஷிகாவுடன் இணைந்து நித்யா வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “இனியும் அவர் என்னை பற்றி இழிவாக பேசினால், அவர் என்னையும் என் மகளையும் அசிங்க அசிங்கமாக திட்டிய ஆடியோவும், வீடியோவும் என்னிடம் இருக்கிறது. அதை வெளியிட்டு விடுவேன். மேலும், மகளை பிரிந்து இருக்கிறேன் என அவர் நடித்து கொண்டிருக்கிறார்.
என்னை மட்டும் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு அனுப்பினால் அவரை வச்சி செஞ்சிவிடுவேன்” என நித்யா கூறியுள்ளார். மேலும் பாலாஜியின் மகள் போஷிகா கூறியிருப்பதாவது, “அப்பா நீங்க மீடியாவுக்காக மட்டும் அப்படி பண்ணாதீங்க. எது நல்லது எது கெட்டதுனு எனக்கு தெரியும். அந்த அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி வந்திருக்கு” என கூறியுள்ளார்.
தனது மகள் போஷிகாவுடன் இணைந்து நித்யா பேசிய வீடியோ–>
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…