எனக்கு ப்ரீயட்ஸ்னு சொன்ன நித்யாமேனன்.. உடனே மிஷ்கின் என்ன சொன்னார் தெரியுமா?

by Rohini |
mysskin
X

முன்னணி நடிகை: தென்னிந்திய சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கு என ஒரு தனி மார்க்கெட் இருந்து வருகிறது. நடிப்புக்கு என்று பிறந்தவர் போல நித்யா மேனனின் நடிப்பு அனைவரையும் ஈர்த்து வருகிறது. எந்த ஒரு கதாபாத்திரமானாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு அதை நல்ல முறையில் வெளிப்படுத்துபவர் நித்யா மேனன்.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: தமிழில் சொற்ப படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் அனைத்துமே இவருக்கு வெற்றி வாகை சூடி இருக்கின்றன. ஓகே காதல் கண்மணி, சைக்கோ ,திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை குறிப்பிடலாம். அதிலும் சைக்கோ படத்தில் இவருடைய கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. காஞ்சனா படத்திலும் லாரன்ஸுக்கு ஜோடியாக ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

காதலிக்க நேரமில்லை:அதிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நித்யா மேனன். தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருக்கிறார் .இந்த படத்திலும் நித்யா மேனனுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது காய்ச்சல் காரணமாக மிகவும் அவதியுற்றார் நித்யா மேனன்.

அந்த விழாவில் மிஸ்கினுடன் மிகவும் நெருக்கமாக அவர் இருந்ததை பார்க்க முடிந்தது. கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தன்னுடைய அன்பை பரிமாறிக்கொண்டார். மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்யா. அந்த படத்தின் போது ஏற்பட்ட ஒரு சுவாரசியமான அனுபவத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார்.

ஓப்பனாக சொன்ன நித்யா:படப்பிடிப்பில் தனக்கு பீரியட்ஸ் வந்திருக்கிறது என்று முதன் முறையாக ஒரு ஆண் இயக்குனரிடம் சொன்னேன் என்றால் அது மிஸ்கினிடம் தான் சொன்னேன் .உடனே அவர் முதல் நாளா ?ரெஸ்ட் எடு.. கிளம்பு என கூறினார் .அதுவும் அன்று என்னுடைய முதல் நாள் படப்பிடிப்பு. இப்படி பெண்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அன்று நடந்து கொண்டார் மிஷ்கின் என நித்தியாமேனன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story