×

நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருக்கிறார் –  பதிலைக் கேட்டு கடுப்பான நீதிமன்றம் !

நித்யானந்தா ஜாமீன் ரத்து தொடர்பான வழக்கில் அவர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளதாக காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

 

நித்யானந்தா ஜாமீன் ரத்து தொடர்பான வழக்கில் அவர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளதாக காவல்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் அவருக்கு 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இது குறித்து நித்யானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது. இந்நிலையில் அது சம்மந்தமான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது.

வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார். கோர்ட்டில் ஆஜரான அர்ச்சனானந்தா நித்யானந்தா எங்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் போலிஸார் வலுக்கட்டாயமாக இந்த நோட்டீஸை என்னிடம் கொடுத்து சென்றனர் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறை நீதிமன்ற உத்தரவுகளை சரியாக நடைமுறைப்படுத்தாமல் உதாசீனப் படுத்துகிறது என கண்டனம் தெரிவித்தனர். காவல்துறை சார்பில் கோரப்பட்ட மன்னிப்பையும் ஏற்க மறுத்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News