×

மொட்டை மாடியில் உட்கார்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!
 

 நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட சமீபத்திய போட்டோஸ்!
 
 
மொட்டை மாடியில் உட்கார்ந்து சுட்டெரிக்கும் வெயிலில் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக எம்மனசு தங்கம், விஜய் ஆண்டனியுடன் திமிரு பிடிச்சவன், ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால், அந்த மூன்று படங்களுமே பெரிதாக ஓடவில்லை.

நிவேதா பெத்துராஜ் தமிழை தவிர தெலுங்கிலும் நடித்துள்ளார். அங்கு அவர் கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கில் அதிக வாய்ப்பு இவரை தேடி வருகிறது.

இதற்கிடையில் அழகான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை வளைத்து வைத்திருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ், தற்போது மொட்டை மாடியில் சுட்டெரிக்கும் வெயிலில் அமர்ந்து போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News