திடீரென திருக்குறள் பதிவு போட்ட உதயநிதி ஸ்டாலின் ஹீரோயின்!.. டீகோட் செய்யும் நெட்டிசன்கள்!..
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரின் பதிவுகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருக்குறள் பதிவு தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை த்ரிஷா மற்றும் பெண்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பின்னர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தது.
இந்த சூழலில், நிவேதா பெத்துராஜ் தனது சமூக வலைதளப் பதிவில், "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்." என்ற குறளை மட்டும் பதிவிட்டுள்ளார்.
திருக்குறள் 183-ன் பொருள், "பிறர் இல்லாதபோது அவரைப் பழித்துப் பேசிவிட்டு, நேரில் அன்பாக நடிப்பதைவிட, அத்தகைய பொய்யான வாழ்க்கையை வாழாமல் இருப்பதே சிறந்தது" என்பதாகும்.
எனினும், உதயநிதி ஸ்டாலின் அல்லது தற்போது நிலவி வரும் சர்ச்சை குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் தனது பதிவில் நேரடியாக எந்தக் குறிப்பையும் வெளியிடவில்லை. இதனால், அவரது பதிவின் நோக்கம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
