லைட் வெயிட் பேபியாக மாறிய நிவேதா தாமஸ்!.. வேறமாறி டிரான்ஸ்பர்மேஷன்!..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்த நிவேதா தாமஸ், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் டிரான்ஸ்ஃபர்மேஷன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த புகைப்படங்களுடன் நிவேதா தாமஸ், ஆம்ஸ்டர்டாம் நகரின் தெருக்களில் நடந்து சென்றபோது ஒரு பூக்கடையை கடந்து சென்றதாகவும், அங்கிருந்த பூக்களின் வாசனை தோட்டம் போல இருந்ததால் நின்று ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஒரு பூங்கொத்தின் நிறங்கள் தனது அம்மாவின் 32 ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் புடவையை நினைவுபடுத்தியதாக நிவேதா தெரிவித்துள்ளார். அந்த தருணத்தில் தான் உடலளவில் ஆம்ஸ்டர்டாமில் இருந்தாலும், மனதளவில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வீட்டில் இருக்கும் அலமாரிக்குள் இருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், சில விஷயங்கள் நம்மை வேறு சில நினைவுகளுடன் எவ்வளவு அழகாக இணைத்துவிடுகின்றன என்பதை நினைத்துப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது என்றும் நிவேதா குறிப்பிட்டுள்ளார்.

‘தர்பார்’ படத்திற்குப் பிறகு நிவேதா பெரும்பாலும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள இந்த பட்டுப்புடவை அணிந்து புதிய லுக்கில் உள்ள புகைப்படங்கள் தமிழ் படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.