'பிரேமம்' அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பைக் ரேஸராக நிவின் பாலி... வெளியானது 'விஜயம்' அறிவிப்பு டீசர்!
கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் நிவின் பாலி. இவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம், பிரேமம்' ஆகிய இரண்டு படங்களில் நடித்தார்.
இதில் 'பிரேமம்' ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வெற்றி பெற்றது. சமீபத்தில், நிவின் பாலி - அல்போன்ஸ் புத்திரன் காம்பினேஷனில் ஒரு புதிய படம் உருவாகப்போவதாக அறிவிப்பு வந்தது.
தற்போது, இந்த படத்துக்கு 'விஜயம்' என டைட்டில் வைத்துள்ளதாக அறிவித்ததுடன், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரையும் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நிவின் பாலியின் 50-வது படமான இதில் அவர் பைக் ரேஸராக வலம் வரப்போகிறார். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகுமாம்.
Every great ride begins with a little faith..and someone willing to take the first turn with you.
— Nivin Pauly (@NivinOfficial) June 27, 2026
Back with the friend who started this journey with me.
Presenting the official first look poster in Malayalam , English and Tamil of #Vijayam
A @puthrenalphonse Film❤️… pic.twitter.com/UnOtscTbnB
