பிரேமம் பட ஹீரோ!.. பிரேமலு பட ஹீரோயின்!.. அடேங்கப்பா என்னவொரு காம்பினேஷன்!..

 
mamitha

மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான பிரேமலு படத்தின் இயக்குநர் கிரிஷ் AD இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் பெத்லஹேம் குடும்ப யூனிட். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நிவின் பாலி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ‘பிரேமலு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கிரிஷ் AD இயக்கும் அடுத்த படமாக இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது.

nivin

ஃபகத் ஃபாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் இணைந்து பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

ஓணம் பண்டிகை காலத்தில் மலையாள சினிமாவில் பல பெரிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில், பெத்லஹேம் குடும்ப யூனிட் படமும் முக்கிய போட்டியாளராக களமிறங்குகிறது. ‘ப்ரேமலு’ வெற்றிக்குப் பிறகு கிரிஷ் AD மீண்டும் ஒரு குடும்ப பொழுதுபோக்கு வெற்றிப்படத்தை வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நகைச்சுவை மற்றும் காதலை கொண்டு உருவாகியுள்ள பெத்லஹேம் குடும்ப யூனிட் திரைப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

From Around the web