Categories: Cinema News latest news

எல்லாப் புகழும் விஜய்க்கே!.. தளபதி – 67ல் இந்த நடிகருக்கு வாய்ப்பு இல்லப்பா!..

தமிழ் சினிமாவில் விஜயின் மவுசு எந்த அளவில் உள்ளது என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. எப்பொழுதும் லைம் லைட்டிலேயே இருக்கும் ஒரு மாஸ் நடிகர் தான் விஜய். மேலும் எம்ஜிஆர் , ரஜினிக்கு அடுத்தப்படியாக இவரும் ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே வலம் வருகிறார்.

vijay

சமீபத்தில் வாரிசு படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் பெரும் சாதனையை படைத்திருக்கிறார் விஜய். அடுத்ததாக லோகேஷுடன் தளபதி – 67 படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவரின் வசூல் வேட்டை இப்பொழுதில் இருந்தே சூடு பிடித்துவிட்டது.

இதையும் படிங்க : பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’!.. கண்ணதாசன் சொன்ன அருமையான யோசனை..

இந்த நிலையில் தளபதி- 67 படத்திற்கான அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த படம் லோகேஷின் LCU க்கு கீழ் அமைக்கப்படுமா என்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதுவும் போக ஒரு மல்டி ஸ்டார் படமாகவும் அமைய இருக்கின்றது.

vijay1

ஏற்கெனவே மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நிவின் பாலி, ப்ரித்விராஜ் போன்றோர் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விக்ரமும் தளபதி – 67 ல் இணைய இருக்கிறார் என்ற செய்தி மிகவும் வைரலானது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று பிரபல பத்திரிக்கையாள செய்யாறு பாலு கூறினார்.

ஏனெனில் இயல்பாகவே விக்ரமுக்கு விஜயை மிகவும் பிடிக்குமாம். பல மேடைகளில் விஜயை பற்றி பலவாறு புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுவும் போக விஜயின் மார்க்கெட்டை நன்றாக அறிந்தும் வைத்திருப்பவர். அதற்கும் மேலாக தன்னுடைய மார்கெட்டின் தரத்தையும் தெரிந்தவர்.

vijay2

விஜய், அஜித் என ரசிகர்கள் புகழாரம் பாடினாலும் விக்ரமுக்கு என்று தனிக் கூட்டமே இருக்கின்றது. அதனால் தன்னால் விஜயிக்கு எந்த அளவும் பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே விக்ரம் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்க மாட்டார் என்று செய்யாறு பாலு கூறினார்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் விக்ரம் தங்கலான் படத்திற்காக வேறொரு கெட்டப்பில் இருக்கிறாராம். அது யாருக்கும் தெரியாத அளவுக்கு பா.ரஞ்சித் பார்த்துக் கொள்கிறாராம். அப்படி இருக்கும் போது எப்படி தளபதி – 67ல் விக்ரம் நடிப்பார் என்று செய்யாறு பாலு கூறினார்.

Published by
Rohini