Categories: Cinema News latest news

கார்த்திக்கு ஓகே..விஜய்க்கு சரியா வருமா?…தளபதி 67-ல் ரிஸ்க் எடுக்கும் லோகேஷ்….

பொதுவாக விஜய் படம் என்றாலே பாடல், பாடல்களுக்கு விஜய் ஆடும் நடனம் மற்றும் சண்டை காட்சிகள்தான் பிரதானமாக இருக்கும்.

இவைகள் மூலமாகத்தான் விஜய் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். எனவே, தனது திரைப்படங்களில் 4 பாடல்கள், நடனம் மற்றும் சண்டை காட்சிகள் இருக்கும் படி விஜய் பார்த்துக்கொள்வார். சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட அரபிக்குத்து பாடலில் விஜய் ஆடிய நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில், முதன் முறையாக விஜய் பாடல்கள் இல்லாத ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதிலும், விஜய்க்கு இப்படத்தில் ஜோடி கூட கிடையாதாம். பீஸ்ட் படத்திற்கு பின் விஜய் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் விஜயும், லோகேஷ் கனகராஜும் இப்படத்தில் மீண்டும் இணையவுள்ளனர். இப்படம் விஜயின் 67வது திரைப்படமாகும். இந்த படத்தில்தான் விஜய்க்கு பாடல் காட்சிகள் மற்றும் ஜோடி கிடையாதாம்.

விஜய் இதற்கு சம்மதம் கூறியுள்ளார் எனில் கதை அவ்வளவு நன்றாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால், பாடல்,சண்டை காட்சிகள் இல்லாத விஜய் படத்தை அவரின் ரசிகர்கள் ஏற்பார்களா என்பதுதான் தெரியவில்லை.

கைதி படத்தில் கார்த்திக்கு ஜோடியும், பாடலும் இல்லாமல்தான் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா