×

மூளையத்தான் வளக்க விரும்புறேன்… முடியை இல்லை – ரசிகரின் வாயை ஷட் அப் பண்ணிய ஓவியா!

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் உரையாடவும் செய்கிறார்.

 

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நிலையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் உரையாடவும் செய்கிறார்.

நடிகை ஓவியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது புதிய தோற்றத்திலான புகைப்படத்தை பதிவிட்டார், அதில் தனது முடியை வெட்டி கம்மியாக டாம்பாய் தோற்றத்தில் இருந்தார். இதைப் பலரும் பாராட்டிய நிலையில் ஒரே ஒரு குறும்புக்கார ரசிகர் மட்டும் ‘இந்த ஹேர் ஸ்டைலில் இருந்தால், கடை திறப்பு விழாவுக்கு கூட உங்களை கூப்பிட மாட்டாங்க’ என கமெண்ட் செய்தார்.

தில்லுக்கு துட்டுன்னு நிக்கிற ஓவியா கிட்ட இந்த கமெண்ட்டெல்லாம் செல்லுபடி ஆகுமா? உடனே அந்த ரசிகருக்கு ‘என் அழகை பற்றி நீங்க கவலைப்படாதீங்க. நான் விக் கூட வச்சுக்குவேன். மூளையைத்தான் வளர்க்க விரும்புறேன், தலைமுடியை கிடையாது. முடியை வளர்ப்பதும் வெட்டுவதும் என் சுதந்திரம். ’ என நறுக்கெனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News