Categories: Cinema News latest news throwback stories

நான் ப்ராங்கா சொல்லிடுறேன்… ஒரு ஹீரோவும் இத செய்யவே மாட்டாங்க… நானும் போனு விட்டுட்டேன்! ஃபீலான தேவா!

தமிழ் சினிமாவில் தேனிசை தென்றலாக வலம் வருபவர் தான் தேவா. இவரின் பாடல்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் இன்றைய அளவிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். பல வருடம் கழித்து கேட்டாலும் அந்த பாடலின் வைப் இன்னமும் அப்படியே இருப்பதே தேவாவின் ஸ்பெஷலாக இருக்கிறது.

முன்னணி தமிழ் நாயகர்கள் அனைவருக்குமே தேவா இசையமைத்து இருக்கிறார். கிட்டத்தட்ட எல்லா பாடல்களுமே செம ஹிட் என்பது தான் முக்கியமான விஷயமே. அஜித்தின் வாழ்க்கையையே மாற்றிய காதல் கோட்டை படத்தின் இசையமைப்பாளரும் தேவா தான். அப்படத்தின் பாடல்கள் இன்றைய அளவும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இதையும் படிங்க : எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி… பழைய பார்முக்கு திரும்பிய ரஜினி… பாட்ஷா இரண்டாம் பாகமா?

முதல்முறையாக அஜித்துக்காக வளர்மதி படத்தில் பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா, கருணை வச்சா நானும் ஹீரோப்பா என்ற டூப் வரிகளுக்கு ஏற்ப இன்று அஜித் மிகப்பெரிய நடிகராக இருக்கிறார் என்று தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறி இருக்கிறார்.

அந்த பேட்டியில் இருந்து, நான் சினிமாவில் கிட்டதட்ட விஜய், அஜித், பிரசாந்த் என எல்லா முன்னணி நடிகர்களுக்குமே இசையமைத்து இருக்கிறேன். அதில் அனைவருமே ஒரே மாதிரியாக தான் இருக்கிறார்கள். பாடல் நல்ல வரவேற்பினை பெற்றால் கூட போன் செய்து நல்லா இருப்பதாக சொன்னதே இல்லை. 

இதையும் படிங்க – சிகிச்சைக்கு 78 லட்சம்! நா.முத்துக்குமார் மறைவிற்கு சில நாட்கள்முன் நடந்த திக் திக் சம்பவம்..

அப்படி பாடல்கள் நல்லா இருந்தால் போன் வரை செய்து பாராட்டும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். என் மேல் முதலில் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அண்ணாமலையில் நம்பிக்கை மலையளவு உயர்ந்தது.

அதன் பின்னர் அவரின் எல்லா படங்களின் பாடல்கள் முடிந்ததும் எனக்கு போன் செய்து விடுவார். கமல் எப்போதுமே ரெக்கார்டிங்கில் இருப்பதால் அவருக்கு போன் செய்யும் வேலை இல்லை. அந்த இடத்தில் பாராட்டி விடுவார். மற்ற நாயகர்களிடம் இரண்டு படங்களுக்கு எதிர்பார்த்தேன். அதன் பின்னர் விட்டுவிட்டேன் என தேவா தெரிவித்து இருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily