×

சினிமா படப்பிடிப்புக்கு அவசரம் இல்லை – கமல்ஹாசன் அதிர்ச்சி கருத்து!

கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் தொடங்குவதற்கு அவசரம் தேவையில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதை மீண்டும் தொடங்குவதற்கு அவசரம் தேவையில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சனைக் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் மீண்டும் படப்பிடிப்புகளை தொடங்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சினிமாவின் ஆல் இன் ஆல் என அழைக்கப்படும் கமல்ஹாசன் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமா என்பது அத்தியாவசிய சேவை இல்லை. அது ஒரு பொழுதுபோக்கு இடம் தான். எப்படி கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் வேண்டாம் என்று சொல்கிறோமோ அது போல சினிமாவும் இப்போது வேண்டாம் என்று சொன்னால் அது தவறாகிவிடாது. நம்முடைய மருத்துவமனைகளை வலுப்படுத்த வேண்டும். கோயில்களை எல்லாம் மூடி வைத்திருக்கும்போது, டாஸ்மாக்கைத் திறக்க வேண்டியதில்லை என்பதுதான் என்னுடைய விமர்சனம்.எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News