×

அவரை யாராலும் நிரப்ப முடியாது! யாரைப் புகழ்ந்தார் தெரியுமா காயத்ரி ரகுராம்?

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம்.

 

கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம்.

சினிமா நடிகையான காயத்ரி ரகுராம், பாஜகவில் இணைந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இணையத்தில் அதிகமாக திமுகவினரை விமர்சனம் செய்து அடிக்கடி சச்சரவுகளில் ஈடுபட்டு வருபவர் காயத்ரி. இது சம்மந்தமாக இணைய திமுகவினரும் இவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கலைஞரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காயத்ரி ரகுராம் ‘திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியை அவரது பிறந்தநாளன்று நினைவுகூர்வோம். அவர் பேச்சிலும் சிந்தனையிலும் திறமையானவர். இன்றைய திமுகவில் அவரைப் போல வேறொருவர் இல்லை. அவர் இடத்தை திமுகவில் யாராலும் நிரப்ப முடியாது.’ எனக் கூறியுள்ளார்.

அவரது இந்த பாராட்டு திமுகவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News