×

போய் வாருங்கள் விவேக்!.. உங்கள் சுவாசம் நின்று போனாலும் நினைவுகளை சுமந்திருப்போம்! -  

 
போய் வாருங்கள் விவேக்!.. உங்கள் சுவாசம் நின்று போனாலும் நினைவுகளை சுமந்திருப்போம்! -

மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 59.  அவரின் மரணம் ரசிகர்களையும், திரைத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இவரின் உடலுக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி பேசியும், அவரின் மரணத்திற்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். 

vivek

80களில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வந்தவர் விவேக். நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக மெட்ராஸ் ஹுயூமர் கிளப்பில் ஸ்டேண்டப் காமெடி செய்து கொண்டிருந்தார். அங்கு அவரின் திறமையை கண்ட பாலச்சந்தர் தனது ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில்  அவரை அறிமுகப்படுத்தினார்.  அதேபோல், பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடித்த ‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படம் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அப்படத்தில் அவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்கிற வசனம் ரசிகர்களிடம் பிரபலமானது. இப்போதும் அந்த வசனத்தை பேசும் போது விவேக்தான் நியாபகத்திற்கு வருகிறார். ஏறக்குறைய அனைத்து நடிகர்களுடன் நடித்துள்ளார்.

vivek

சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளரான விவேக் ஒருகட்டத்தில் சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தனது நகைச்சுவையில் கலந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். மறைந்த நடிகர் எம்.ஆர் ராதாவுக்கு பின் பகுத்தறிவு சிந்தனைகளை ரசிகர்களின் மனதில் விதைத்தார். சின்னக் கலைவாணர் என்கிற பட்டம் அவருக்கு 100 சதவீதம் பொருந்தும். சனங்களின் கலைஞர் என்றும் ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.

vivek

சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராக மட்டுமில்லாமல் செயற்பாட்டாளராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார். மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் மீது அதீத மரியாதை கொண்ட விவேக் கலாமின் அறிவுரைப்படி மரக்கன்றுகளை நட துவங்கியர் இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளார். ‘செல் நோண்டும் பல மணியில் சில நிமிடம் ஒதுக்கி மண் நோண்டி மரம் நடுவோம்’என முழங்கியவர்.

தாவரங்களை நேசித்தார், மரங்களை நட்டார், சமூப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார், திரைத்துறையில் பலருக்கும் உதவியுள்ளார், புத்தகங்கள் வாசிப்பதிலும், இசையிலும் ஆர்வம் உள்ளவர், சில இசைக்கருவிகளை வாசிக்கவும் தெரிந்தவர், சினிமாவில் பாடியும் உள்ளார், ராகங்கள் பற்றி ஞானம் உள்ளவர், சுற்றுசூழல் ஆர்வலர் என அவருக்கு பல முகங்கள் உண்டு. சிறந்த மனிதன் என அவரை திரையுலகினர் கொண்டாடுகின்றனர். காலம் பறித்துக்கொண்ட தனது மகன் பெயரில் ஒரு டிரெஸ்டை துவங்கி சுனாமி, பேரழிவு, கொரோனா போன்ற காலங்களில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தவர் விவேக்.

vivek

சிரிக்கவைப்பதே நகைச்சுவை என்றிருந்த சினிமாவில், நகைச்சுவை மூலம் சிந்திக்கவும் வைத்தவர் விவேக். அவரின் நினைவு எப்போதும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர். அப்துல் கலாம் வழியில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். உங்கள் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. உங்களுடைய நகைச்சுவை நினைவுகளும்.. நீங்க நட்ட மரங்களின் நிழலும் என்றும் காலத்தால் அழியாதவை...சுற்றுச் சூழலில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட ஒரு கலைஞனை நாடு இழந்து விட்டது.

vivek

நீங்கள் இல்லை என்பதை ஏற்கமுடியவில்லை. உங்கள் சுவாசம் காற்றில் கரைந்து போனாலும் நீங்கள் விட்டுச்சென்ற விதைத்து சென்ற நினைவுகளும் மரக்கன்றுளும் உங்கள் நினைவுகளை சுமந்து எங்களோடு என்றும் கலந்திருக்கும்.

போய் வாருங்கள் விவேக்!....

From around the web

Trending Videos

Tamilnadu News