தமிழ்ல யாருக்கும் டைரக்ஷன் பண்ண தெரியல.. சொல்றவரு ஜீனியஸ் சித்தார்த்
சித்தார்த்:
தமிழ் சினிமாவில் ஆயுதஎழுத்து படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அந்தப் படத்தில் அவர் பெரியளவு பேசப்படாததற்கு காரணம் சூர்யா மற்றும் மாதவன். இவர்கள் இருவரும் அந்த நேரத்தில் டாப் நடிகர்களாக இருந்ததுதான் சித்தார்த் அந்தப் படத்தில் பெரிதாக தெரியவில்லை. ஆனால் படத்தில் அமைந்த காக்கை என்ற பாடல் இளசுகளை துள்ளல் போட வைத்தது.
அந்தப் படத்திற்கு பிறகு பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சித்தார்த். ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆரம்பகாலங்களில் காதல் சப்ஜெக்ட் உள்ள படங்களிலேயே நடித்து வந்த சித்தார்த் ஒரு லவ்வர் பாயாக அறியப்பட்டார். அதன் பிறகு சீரியஸான படங்களிலும் கவனம் செலுத்தலாம் என்று எண்ணி நடித்த படம்தான் சிவப்பு மஞ்சள் பச்சை.
இந்தியன் 2க்கு ஆப்பு:
அதன் பிறகு சித்தா படம். தமிழில் சித்தார்த்துக்கு பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் படமாக சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் சித்தா ஆகிய படங்கள்தான் அமைந்தது. தெலுங்கிலும் ஒரு லவ்வர் பாயாக காதல் கதையில் நடித்து வந்தார். ஹிந்தியிலும் நடித்திருக்கிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படமும் அவருக்கு ஆப்பு வைக்கிற படமாகத்தான் அமைந்தது.
கமல் படம் என்பதையும் தாண்டி முக்கால்வாசி காட்சிகள் பெரும்பாலும் சித்தார்த்தாகவேதான் தெரிந்தார். அதுவே ரசிகர்கள் கடுப்படைய காரணமாக அமைந்தது. சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன நிலையில் பெரிதாக இவருடைய படம் கோடிக் கணக்கில் வசூலிக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில் சித்தார்த்திடம் இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய ஃபேவரைட் இயக்குனர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
யார் ஒழுங்கா பண்றா டைரக்ஷன்?:
அதற்கு சித்தார்த் ‘அப்படி சொல்லிவிட முடியாது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நாம் சுமாரான படங்கள்தான் எடுத்து வருகிறோம். அவ்வளவு சூப்பர்னும் சொல்லமுடியாது. என் படத்தையும் தான் சொல்றேன். தமிழ்ல யாரும் பெருசா ஆ ஊனு சொல்ற அளவுக்கு படங்களே இல்லை. சொல்லப்போனால் 50 வருடத்திற்கு முன்னால் உள்ள இயக்குனர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது யாருக்கும் டைரக்ஷன் வரலனுதான் தோணுது ’ என சித்தார்த் அந்த பேட்டியில் கூறினார்.