Categories: Cinema News latest news

வாய் பேச்சி வீணா போச்சி!.. ஓடி ஒடி உழைச்ச மனுஷனுக்கு காட்டிய நன்றிக்கடனா இது? நிற்கதியா விட்டுட்டீங்களே!..

சில தினங்களுக்கு முன்புதான் விஜயகாந்த் தன்னுடைய 71 வது பிறந்தநாளை தொண்டர்கள் முன்னிலையில் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடினார். மடைதிறந்த வெள்ளம் போல் விஜயகாந்தை பார்க்க அவரது தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். விண்ணை பிளக்கும் சத்தத்துடன் கேப்டன் வாழ்க, கேப்டன் என ரசிகர்கள், தொண்டர்கள் என முழக்கமிட்டனர்.

இன்று அவர் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றமே நிகழ்ந்திருக்கும். ஆனால் எல்லாம் விதி என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டும். கம்பீரமாக ஒரு காலத்தில் கர்ஜித்துக் கொண்டிருந்த கேப்டனை இந்த நிலைமையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் கண்கலங்கினர்.

இதையும் படிங்க : அப்பா பகை குட்டி உறவா? அஜித்தால் கடுப்பில் விஜய்… என்ன நடந்தது?

இருந்தாலும் ரசிகர்களை பார்த்து கையசைத்து தம்ப்ஸ் அப் காட்டி உற்சாகமூட்டினார்  விஜயகாந்த். அரசியலில் இன்று வரை ஓரளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் சினிமாவிலும் தன்னுடைய தலைமையை நல்ல முறையில்தான் கொண்டு செலுத்தினார்.

நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு எப்படியாவது நடிகர் சங்கக் கடனை தீர்க்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைத்தவர் விஜயகாந்த். இரவும் பகலும் வெளி நாடுகளில் பயணம் மேற்கொண்டு ஏராளமான கலை  நிகழ்ச்சிகளை அத்தனை நடிகர்களையும் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வெற்றி  நிகழ்ச்சியாக மாற்றியவர் கேப்டன்.

இதனால் தான் நடிகர் சங்க கடனே தீர்ந்தது. ஆனால் அவர் பிறந்த நாளுக்கு நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் கலைஞர்களிடமிருந்து ஒரு வாழ்த்து கூட வரவில்லை. கண்டிப்பாக வாழ்த்த வேண்டும் என்று ஒரு கட்டாயமும் இல்லைதான். ஆனால் நடிகர் சங்கத்திற்காக இவரை  மாதிரி எந்த நடிகராவது உழைத்திருப்பார்களா? சாதாரண மக்களுக்கே தெரியும்.

இதையும் படிங்க : உலக நாயகனுக்கே உரிய தனி அங்கீகாரம்! இன்று வரை யாராலும் தொட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டிய கமல்

அப்படி இருக்கையில் அவருக்கு ஒரு மரியாதை கொடுக்கும் பட்சத்திலாவது நடிகர் சங்க கமிட்டியிலிருந்து கண்டிப்பாக வாழ்த்துக்களையும் மரியாதையையும் கொடுத்திருக்க வேண்டுமல்லவா? அதை செய்யாதது பெரும் தவறு என சித்ரா லட்சுமணன் கூறினார்.

ஆனால் விஜயகாந்த் அப்படி பட்டவர், அவருக்கு இப்படி ஆகியிருக்கக் கூடாது, எங்களை வழி நடத்தியவர் என்று பேசினால் மட்டும் போதுமா? அவருக்கு உண்டான அந்த மரியாதையை கொடுக்க வேண்டுமே.

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini