×

எஸ்.பி.பி போல் யாரும் பிறக்கப்போவதில்லை...அர்ஜூன் வெளியிட்ட வீடியோ...

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ் பி பாலசுப்ரமண்யம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  இந்தியாவின் முன்னணி சினிமா பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்பிரமணியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 

இவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை கடந்த சில நாட்காக தொடர்ந்து பல திடுக்கிடும் தகவலை வெளியிட்டு வந்தனர். எக்மோ கருவிகள் மூலம் செயற்கைளை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அவர் உடல் நலம் தேறி கொரோனா தொற்றிலிருந்து விடுபட திரைபிரபலங்கள் அனைவரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர்.  இதையடுத்து, அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அர்ஜூன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘இனி ஒருவர் பிறந்து போனாலும் எஸ்.பி. போல் வரப்போவதில்லை. அவர் ஒரு வாழும் லெஜண்ட். நீங்கள் ஒரு ஃபைட்டர். விரைவில் திரும்பி வருவீர்கள். உலகில் பிரார்த்தனையை விட பெரிய மருந்து எதுவுமில்லை. விரைவில் உங்கள் புதிய பாடலை நாங்கள் கேட்போம்’ எனப் பேசியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News