Categories: Cinema News latest news

யாருமே வேண்டாம்.! நானே செய்து கொள்கிறேன்.! விஜய் எடுத்த அதிரடி முடிவு.!?

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது.

beast

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார், சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் இப்படத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- விஜய் படத்தில் திடீர் மாற்றம்.! பதறும் படக்குழு.!

இதனால், மலையாளம் மற்றும் தெலுங்கு டப்பிங் விஜய் தன்னுடைய சொந்த குரலில் கொடுக்க முடிவெடுத்துள்ளாராம். இதற்கு முன்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு டப்பிங் கலைஞர்கள் மட்டும் தான் இதுவரைக்கும் செய்து வந்துள்ளனர். தற்போது முதன் முதலில் விஜய் தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்வது ஆச்சரியம் ஊட்டுகிறது.

இந்நிலையில் மலையாளம் மற்றும் தெலுங்கு டப்பிங் பணியை அவரை செய்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan