×

பிரபு இல்ல.... இந்த வயதான இயக்குனருக்கு தான் ஐஸ்வர்யா ராய் ஜோடி!

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாகும் இயக்குனர் பாலாஜி சக்திவேல்

 

மணித்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகிறார்கள். மேலும் படத்தின் இரு முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் அவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பதாக செய்திகள் பரவின.  ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை என்று பின்னர் தெரிய வந்துள்ளது. கதைப்படி நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்ளும் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்தது.

ஆனால், தற்ப்போது அந்த தகவலிலும் உண்மை இல்லை. பிரபு நடிப்பதாக கூறப்பட்ட பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் இயக்குனர் மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம். இவர், அசுரன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில்  ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News