×

சம்பளம் இல்ல... சாப்பாடு இல்ல... டிரைவர் வேலை பாக்குறேன்.. நகுலுக்கு இந்த நிலைமையா?

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் தனது குண்டு உடலை குறைத்து ஸ்லிம் ஆகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 

தற்போது சரியான வாய்ப்புகள் இல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடயை மனைவியுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘டிரைவர் ஆகிவிட்டேன். நல்ல உடை இல்லை. சாப்பாடு இல்லை...அடிமைத்தனம்’ என பதிவிட்டுள்ளார். மனைவிக்கு கார் ஓட்டுவதைத்தான் அவர் அப்படி விளையாட்டாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலடி கொடுத்த அவரின் மனைவி ஸ்ருபி ‘ உன்னை விட நான் நன்றாகவே கார் ஓட்டுகிறேன் என உன் அம்மாவே என்னிடம் கூறியுள்ளார். அப்படி இருக்க நான் உன்னை டிரைவர் ஆக்கப் போகிறேன். நடிக்காதே!’ என பதிவிட்டுள்ளார்.

@srubee’s Driver mode 🤨 🙇🏻‍♂️ slavery, no salary, no proper clothes, no food.. tyrant boss 😰 believe it Fam 🙊 . . #nakkhulsrubee #srubeenakkhul #latergram #hubbyandwifey #dontgobythesmile🤪#shootdiaries #seithefilm

A post shared by Nakkhul Jaidev (@actornakkhul) on

From around the web

Trending Videos

Tamilnadu News