×

படப்பிடிப்பு இல்லை..  வீட்டில் விஜய் என்ன செய்கிறார்?... இதோ தகவல்..

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்புகளை நடத்தவும் அனுமதி இல்லை. எனவே, நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கியுள்ளனர்.
 

வீட்டில் பொழுதை போக்க அவர்கள் திரைப்படங்களை பார்ப்பது, உடற்பயிற்சி செய்வது என நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜயை பொறுத்தவரை மாஸ்டரில் அவரின் பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அரசு அனுமதி கொடுத்தபின் படப்பிடிப்பு துவங்கும் எனத்தெரிகிறது. 

வீட்டில் ஆங்கில படங்கள் பார்ப்பது, நெட்பிளிக்ஸில் வெப் சீரியஸ்களை பார்ப்பது என அவர் நேரம் கழித்து வருகிறாராம். தற்போது பலரம் ரசிக்கப்பட்ட வெப்சீரியஸ் 'Money Heist' ஐ ரசித்து பார்த்து வருகிறாராம். மேலும், இயக்குனர் மணிரத்தினத்தின் கிளாசிக் திரைப்படங்களையும் அவர் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News