×

தமிழ்நாட்டில் என்னை யாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை – தோனி பெருமிதம் !

தமிழ்நாட்டில் தன்னை யாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை என்றும் தல என்றே அழைப்பதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 7 மாத காலமாக சர்வதேசக் கிரிக்கெட் மற்றும் உள்ளூர் போட்டி என எதிலும் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். இதனால் அவரை மைதானத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இம்மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாட இருக்கிறார். இதற்காக சென்னை வந்துள்ள அவர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் சென்னை ரசிகர்களின் அன்பைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘தமிழ்நாட்டில் என்னை யாரும் என் பெயர் சொல்லி அழைப்பதில்லை. தல என்றுதான் அழைக்கிறார்கள். அந்த பெயர்தான் எனக்குப் பல ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. தல என்றால் சகோதரன் என நான் எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் அப்படி அழைக்கும் போது என் மீதான அன்பும், மரியாதையும் வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News