ஒரு கோடி கூட வரலயே!.. நூறு சாமி முதல் நாள் வசூல் அப்டேட்!..

நூறுசாமி படத்தின் முதல் நாள் வசூல் பற்றி பார்ப்போம்..
 
nooru saami

தமிழ் சினிமாவில் அழகான உணர்வுகளை கொண்ட மெல்லிய திரைப்படங்களை இயக்கி வருபவர் சசி. இவர் இயக்கிய சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், பூ, டிஷ்யூம், பிச்சைக்காரன் போன்ற  திரைப்படங்கள் ரசிகர்களிடம் வெற்றி பெற்றது. குறிப்பாக சசி இயக்கும் படங்களில் பெண்களின் கதாபாத்திரங்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் நேற்று வெளியான திரைப்படம்தான் நூறு சாமி. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சுவாசிகா நடித்திருந்தார். விஜய் ஆண்டனி ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்..

சிறுவயதிலேயே கணவரை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள நினைக்கும் போது அவரின் மகன்களும் சுற்றி இருக்கும் மக்களும் அதை அனுமதிக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நேற்று வெளியான இந்த திரைப்படம் பெண்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் பலரும் படம் பார்த்து விட்டு அழுதுவிட்டதாக சொல்கிறார்கள்.

ஒருபக்கம், நூறு சாமி திரைப்படம் முதல் நாளில் 75 லட்சம் வரை வசூல் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. துவக்கத்தில் வசூல் குறைவாக இருந்தாலும் பாசிட்டிவான விமர்சனங்களை தொடர்ந்து இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

Tags

From Around the web