என் அன்பு மனைவியே - கண்ணீருடன் சுவாஷிகா கணவர்!
மிகவும் உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெயர் எடுத்திருப்பவர் தான் நடிகை ஸ்வாஷிகா.மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனியுடன் நூறு சாமி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் சுவாசிக்காவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சுவாசிகாவின் கணவர் அவரது நடிப்பு குறித்து பெருமிதத்தோடு பேசி இருக்கிறார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது, என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக சிறந்த நடிப்புகளில் இதுவும் ஒன்று, நுறு சாமி படத்தில் நீ ரசிகர்களை சிரிக்க வைத்தாய், அழ வைத்தாய், உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறாய் இது உன் கெரியரில் மறக்க முடியாத நடிப்பாக படமாக நிச்சயம் இருக்கும். என்னுடைய கண்களில் கண்ணீருடன் பெருமிதமான புன்னகையோடு சொல்கிறேன் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என அவரது கணவர் மிகவும் எமோஷ்னலாக பதிவிட்டு இருக்கிறார்
