தைமூருக்கு 4 வயசுதான் ஆகுது... நடிகையின் திருமண புரபோசலால் பதறிய கரீனா கபூர்

இவர் பாலிவுட் நடிகையான கரீனா கபூர் நடத்திவரும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது, நோராவின் டான்ஸ் மூவ்மெண்டுகளைத் தானும், தனது கணவர் சாயிஃப் அலிகானும் மிகவும் ரசித்துப் பார்த்ததாக கரீனா கூறினார். அதற்கு நன்றி சின்ன நோரா, கரீனா கபூர் - சயீஃப் அலிகான் தம்பதியின் மகனான தைமூர் அலிகான் பற்றி பேசினார்.
`தைமூர் பெரியவனானதும் அவரைத் திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறேன்’ என்று நோரா சொல்ல, ஒரு கணம் திகைத்து வார்த்தைகள் வராமல் கரீனா அமைதியானார். சில நொடிகளுக்குப் பின்னர் சிரித்தபடியே ரியாக்ட் செய்த கரீனா, தைமூருக்கு நான்கு வயதுதான் ஆகிறது. அதற்கெல்லாம் இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்றார்.
இதைக்கேட்டவுடன் தானும் சிரித்தபடியே, எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை. நான் காத்திருக்கிறேன் என நோரா வெட்கத்தோடு சொன்னது வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்களின் லைக்குகளை அள்ளியிருக்கிறது.