×

மூக்குத்தி மட்டும் இல்லன்னா பையனே தான்... ஹேண்ட்ஸம் ஆம்பள குஷ்பு!

சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து கருத்து பேசி எப்போதும் ட்விட்டரில் ஆக்டீவாக செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு தற்ப்போது ஆண் போல் மாறிய ஃபேஸ் ஆப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு அப்படியே அடாப்ட் ஆகியுள்ள குஷ்புவிடம் அந்த மூக்குத்தியை மட்டும் கழட்ட சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ். இந்த கெட்டப் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலத்து முன்னணி நடிகையான குஷ்பு ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் பல நட்சத்திர நாயகன்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் குஷ்புவும் நடிகர் பிரபுவும் காதலித்து இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன.

ஆனால் சிவாஜி குடும்பத்தினர்களின் முயற்சியால் இந்த ஜோடி பிரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் குஷ்பு, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா , அனந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்ப்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் குஷ்பு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News