ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை... ரவிக்கு நியாயம் வேண்டும் - நடிகை கதறல்!
பிரச்சனையில் ரவி மோகன்:
நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தனது மனைவிக்கும் மகனுக்கும் இடையேயான விவாகரத்து பிரச்சினைகள் குறித்தும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்தும் மனம் உடைந்து கோபப்பட்டு கத்தி கதறி பேசியிருந்தார் .
அதை அடுத்து ரவி மோகனுக்கு பலரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும் ரவி மோகனை தனிமையில் விடாமல் அவரின் உயிரை பாதுகாத்து வாருங்கள். நெருக்கமானவர்கள் அவருடனே கூட இருங்கள் என்று பலரும் அவருக்கு அறிவுரை கூறிய வருகிறார்கள்.

நல்ல மனிதர் ரவி:
இப்படியான சமயத்தில் அவருடன் நடித்த பிரபலமான நடிகை ஒருவர் ரவி மோகனுக்காக குரல் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரவி மோகனை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றிய காலத்திலேயே அவர் மிகவும் எளிமையான இனிமையான மனிதர்.
நல்ல எண்ணம் கொண்ட நல்ல மனிதர். எப்போதும் ஆண்கள் மட்டுமே தவறு செய்வார்கள் என்று எண்ணக்கூடாது. சில நேரங்களில் பெண்களும் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை பார்த்துக் கொண்டு வருகிறோம்.

இருதரப்பிடம் விசாரிக்க வேண்டும்:
அப்படித்தான் இவரது விஷயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சனையில் இருதரப்பினரின் குரலை கேட்க வேண்டுமே தவிர ஒரு பக்கம் மட்டும் கேட்டுவிட்டு தவறை குற்றம் சுமத்த கூடாது என்று நடிகை மீரா சோப்ரா தெரிவித்திருக்கிறார். மீரா சோப்ரா பிரபல பாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.
