ஆர்ஜே பாலாஜி மட்டுமல்ல!.. சூர்யாவுக்கு வில்லனாக கருப்பு படத்தில் அடடே அந்த நடிகரா?..

 
ஆர்ஜே பாலாஜி மட்டுமல்ல!.. சூர்யாவுக்கு வில்லனாக கருப்பு படத்தில் அடடே அந்த நடிகரா?..

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் இன்னும் சில தகவல்கள் வெளியாகி எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துள்ள நிலையில், சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆர்ஜே பாலாஜி மட்டுமல்ல!.. சூர்யாவுக்கு வில்லனாக கருப்பு படத்தில் அடடே அந்த நடிகரா?..

மேலும், ரிலீஸுக்கு முன்பே இப்படம் முன்பதிவில் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் மற்றும் திரில்லர் போன்ற அம்சங்களுடன் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு மே 14 மற்றும் 15 தேதிகளில் காலை 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தினமும் 5 சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது.

இதற்கிடையில், ‘கருப்பு’ படத்தைச் சுற்றி புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை வெளியான அப்டேட்களில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் பரவலாக பேசப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நடிகர் ஆர்யாவும் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஆர்யா வில்லன் கதாப்பாத்திரமாக இருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தில் சூர்யாவுக்கு எதிராக யார் முக்கிய எதிரியாக வரப்போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்கவில்லை. ஏற்கனவே காப்பான் படத்தில் சூர்யாவுடன் ஆர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருப்பு சாமி சக்திக்கு எதிராக ஆர்யா டெவில் சக்தியாக வந்தால் தியேட்டரே பிளாஸ்ட் ஆகிவிடும்.

From Around the web