Connect with us
nsk

Cinema News

உங்களுக்கு எவ்வளவு சம்பளம் வேணும்!. கலைஞருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!..

தமிழ் சினிமாவில் நாடகங்களில் நடித்து பின் சினிமாவுக்கு வந்த பல நடிகர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் ஒருவர். யாரையும் காயப்படுத்தாமல் நகைச்சுவை செய்வது இவரின் பாணி. இவரது காமெடியில் எப்போதும் சமுதாயத்திற்கு தேவையான கருத்து ஒன்று இருக்கும். காமெடி மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களையும், அறிவுரைகளையும் சொன்னவர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். என்.எஸ்.கிருஷ்ணனிடமிருந்து பல நல்ல விஷயங்களை எம்.ஜி.ஆர். கற்றுக்கொண்டார்.

அதேபோல், திரையுலகில் வசனகர்த்தவாக அறிமுகமானவர் கலைஞர் கருணாநிதி. துவக்கத்தில் சில படங்களுக்கு வசனம் மட்டும் எழுதினார். அதன்பின் பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளர். சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் கலைஞர் எழுதியதுதான்.

1951ம் வருடம் கலைஞர் கருணாநிதி திரைக்ககதை, வசனம் எழுத என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் மணமகள். இந்த படத்திற்கான வேலை நடந்து கொண்டிருந்த போது உங்களுக்கு என்ன சம்பளம் வேண்டும் என கலைஞரிடம் என்.எஸ்.கிருஷ்ணன் கேட்க, கருணாநிதியோ ‘எவ்வளவு கொடுத்தாலும் சரி’ என்றாராம்.

உடனே என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு காகிதத்தை எடுத்து 00001 என எழுதி அதாவது ஒரு ரூபாய் என்பதை எழுதி ‘இவ்வளவு கொடுத்தால் சம்மதமா’ என கேட்டாராம். கருணாநிதி அந்த காகிதத்தை அவரிடமிருந்து வாங்கி அதை அப்படியே திருப்பி காட்டினாராம். அப்போது அதில் 10000 என இருந்தது. அதாவது 10 ஆயிரம் என்பதை காண்பித்து இது கொடுத்தால் சம்மதம் என்றாராம்.

கருணாநிதியின் சமயோசித புத்தியை பார்த்து வியந்த என்.எஸ்.கிருஷ்ணன் ‘அடடே நீங்கள் என்னையே ஜெயித்துவிட்டீர்களே’ என சிரித்தாராம்.

Continue Reading

More in Cinema News

To Top