
Cinema News
உன்ன அரசியலுக்கு வா என்று யார் கூப்பிட்டா?.. விஜயை கதற கதற அடித்த சீமான்..
தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் விஜய். இவரும் சினிமாவில் உச்சம் தொட்ட பின்னர் நடிகர்களுக்கான வழக்கமான பாதையான அரசியலை தேர்ந்தெடுத்தார். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர களப்பணியில் இறங்கி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையை வழங்குவதற்கு தயாராகி வருகிறார் விஜய்.
கடந்த சனிக்கிழமை திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய் அவரைக் காண ஏர்போர்ட்டில் இருந்த மக்கள் ஏராளமாக குவிய தொடங்கிவிட்டனர். அங்கிருந்து அவர் செல்லும் மரக்கடை பகுதி வரை ஏராளமான மக்கள் கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. இருப்பினும் எறும்பு போல் மெல்ல மெல்ல ஊர்ந்து மதியம் மூன்று மணி அளவில் தனது தேர்தல் பரப்புரையை மரக்கடை பகுதியில் ஆரம்பித்தார்.

இந்நிலையில் விஜையை சரமாரியாக தாக்கி பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். நேற்று கோவையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ”விஜய் தம்பி நான் எனது உச்சத்தை விட்டுவிட்டு, நான் அவ்வளவு வருமானத்தை விட்டுவிட்டு வந்தேன் என்று சொல்லி இருக்கிறார். நீ வா என்று உன் வீட்டு வாட்ச்மேன் கூட உன்னை கூப்பிட்டு இருக்க மாட்டார், ஏண்டா இப்படி பேசிட்டு அலையுற சேவை செய்ய வந்தால் சேவை செய் அதை விட்டுட்டு நான் அடைக்கலத்தோடு வரவில்லை படைக்களத்தோடு வந்திருக்கிறேன். என்று விஜய் சொல்கிறார்”.
’நீ இப்படி எல்லாம் வர வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே. முதல்ல நீ எதற்கு வர? என்னுடைய அன்பு சகோதரர் அஜித்தும் ஐயா ரஜினிகாந்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. ஐயா எம்ஜிஆர் மக்களின் பிரச்சனையை ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுதி வைத்து பேசுவார். ஐயா விஜயகாந்த் அவர் மனதில் இருந்து பேசுவார். ஆனால் என் தம்பி விஜய் பெரிய துண்டு பேப்பர் இல்லாமல் வெளியே வர மாட்டார். இவரெல்லாம் மழையில் பேச முடியாது காகிதம் நனைந்து விடும்” என்று நக்கல் அடித்து சிரிக்கிறார். இவ்வாறு விஜயை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் சீமான்.