அந்த சீன்ல தியேட்டரே அழுதுச்சு - மனதை தொட்ட நூறுசாமி - விமர்சனம்!
சசி இயக்கத்தில் கிராம பாங்கான கதைகளத்தில் உருவாகி விஜய் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் நூறுசாமி சுவாஷிகா இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக பக்காவாக நடித்திருக்கிறார். படம் உருவானது முதல் செலபிரிட்டி ஷோ வரைக்கும் பல பிரபலங்கள் படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வந்தார்கள். அதனால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது இந்த நிலையில் இந்த திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியடையச்செய்துள்ளது.
படத்தின் கதை:

நூறு சாமி திரைப்படத்தில் தன்னுடைய சிறுவயதிலேயே கணவனை இழக்கிறார் சுவாஷிகா . அதன் பின் தன்னுடைய இரண்டு மகன்களை மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் மறுமணத்துக்கு ஆசைப்படும் சுவாசிக்காவை பிள்ளைகள் வெறுக்க தொடங்குகிறார்கள். அந்த ஆசையை குழி தோண்டி சுவாஷிகா புதைத்து விடுகிறார். இரு பிள்ளைகளும் வளர்ந்து காதலிக்க தொடங்கும் போது தன் தாயின் நியாயமான ஆசை புரிந்து கொள்ளும் மகன்கள் சுவாசிக்காவின் மீதி வாழ்க்கையை பிரகாசிக்க அவருக்கு ஒரு திருமணத்தை நடத்த முடிவு செய்கிறார்கள். மகன்களின் வற்புறுத்தலை ஏற்று விஜய் ஆண்டனியை சந்திக்கும் சுவாசிகா அவரது நல்ல மனது பிடித்து போக அவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். திருமணத்தை மகன்களை முன்னின்று நடத்துகிறார்கள். இதற்கு இடையில் ஊர் மானம் போய்விடும் என்று கூறி ஊர்காரர்கள் வெட்டுக்கம்பு வீச்சருவாளுடன் திருமணத்தை நிறுத்த ஒன்று கூடி சதி திட்டம் தீட்டுகிறார்கள். சுவாஷிகா ஆசைப்பட்டபடி நடிகர் விஜய் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டாரா? இல்லை ஊர்காரரின் சதியால் அந்த திருமணம் நின்று போனதா? என்பதுதான் மீதி கதை.
படத்தின் சிறப்பு:
இந்த திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் என்பதை தாண்டி நிஜ கேரக்டராகவே விஜய் ஆண்டனி அவ்வளவு தத்ரூபமாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பு புதுவிதமாக இருந்தது. இதற்கு முன் இது போல் ஒரு விஜய் ஆண்டனியை நாம் பார்த்திருக்கவே முடியாது. சுவாஷிகா போன்று பல பெண்கள் சமூகத்திற்காக பலி ஆடுகளாக சுற்றிக் கொண்டிருப்பதை அப்படியே நம் கண் முன்னாடி பிரதிபலித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் சுவாஷிகா மகன்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது கலக்கத்தில் அவர் கதறி அழுகிறார். அந்த காட்சி நம் அனைவரையும் தியேட்டரில் கலங்கடித்து விடுகிறது. படத்தின் பலம் என்று எடுத்துக் கொண்டால் உணருப்பூர்வமான இந்த படம் ரசிகர்களை முழுமையாக திருப்தி அடைய செய்துள்ளது. படத்தின் மைனஸ் என்னவென்று கேட்டீர்களானால் எமோஷனல் ஆன ஒரு காட்சியை காமெடியில் கொண்டு போய் நிறுத்தியது படம் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது .
மொத்தத்தில் இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பெற்றோர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை பிள்ளைகள் புரிந்து கொண்டு அவர்களுக்காக ஏதேனும் வாழ்க்கையில் நாம் திருப்பி செய்ய வேண்டும் என நினைக்கவேண்டும். குறிப்பாக அம்மாவை ஒரு மனுசியாக மதிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை சசி இந்த படத்தில் ஆழமாக தெரிவித்திருக்கிறார். நூறுசாமி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வெற்றி பெற்று சாதனை அடைய அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
