×

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்… முக்கிய வீரர் விலகல்- இந்தியாவுக்கு பின்னடைவு!

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா விலகியுள்ளார்.

 

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அணியின் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா விலகியுள்ளார்.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி 20 தொடரில் 5-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதில் கடைசி போட்டியின் போது விளையாடிய ரோஹித் ஷர்மா காலில் தசைப் பிடிப்புக் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட காயம் முழுதாக குணமடையாததால் அவர் 5 ஆம் தேதி நடக்கும் ஒருநாள் தொடரில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். அவருக்குப் பதிலாக மாற்றுவீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் ஷர்மா விலகியுள்ளதால் இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News