×

முதல்வர் மாவட்டத்தில் சரக்கு வாங்க பள்ளியில் டோக்கன் வழங்கிய அதிகாரிகள்!

ஊரடங்கு தளர்வுக்குப் பின் வியாழக்கிழமை (மே 7) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுப்பிரியர்கள் ஆதார் கார்டுகள் உடன் சரக்கு வாங்க டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்தனர்.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள 216 டாஸ்மாக் கடைகளில், மாநகரில் 46 கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 168 டாஸ்மாக் கடைகள் மட்டும் நேற்று முதல் திறக்கப்பட்டன.

அதேசமயம் ஒரு மணி நேரத்திற்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி மது விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் டோக்கன் முறை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கமலாபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுப்பிரியர்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சேலம் பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி பள்ளிக்கூடத்தில் டோக்கன் தருவதை நிறுத்தினர்.

இருப்பினும், பள்ளிக்கூடத்தை மதுபாட்டில் வாங்க டோக்கன் வழங்கும் இடமாக மாற்றியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News