×

ஓ! இதுக்குதான் இந்த கெட்டப்பா? - லீக்கான சூர்யாவின் புது லுக் சீக்ரெட்

 

நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் மிகுந்த எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இத்திரைப்படம் நிஜ கதையிலிருந்து எடுக்கப்பட்டது. 

இப்படம் நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் விளம்பரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சூர்யாவே தனது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் நேரடியாக இப்படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே அவர் புது ஹேர் ஸ்டைலுடன் காணப்படுகிறார். தற்போது அதன் பின்னணி தெரியவந்துள்ளது. நவரசா என்கிற தலைப்பில் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை மணிரத்னம், கவுதம் மேனன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் இயக்கவுள்ளனர். இப்படத்தில் நடிக்கவே சூர்யா இந்த கெட்டப்பில் இருப்பது வெளியே கசிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்த பின் துவங்கவுள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News