×

காதலுக்கு ஓகே... கல்யாணத்திற்கு நோ சொன்ன பெண்... காதலன் செய்த கொடூரம்!

காதலித்து கல்யாணத்திற்கு மாட்டேன் என்று சொன்ன மாணவியான காதலியை கழுத்தை நெறித்து விஷம் ஊற்றியும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

கோவையை அடுத்த கீரநத்தம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்ற அந்தக் கல்லூரி மாணவியும் கணபதி பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற அந்த இளைஞனும் பள்ளியில் ஒன்றாகப் பயின்று வந்தது முதலே காதலித்து வந்தனர்.

இந்த விவகாரம் நந்தினியின் பெற்றோருக்குத் தெரியவந்து அவர்களும் இவர்களது திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர்.  இந்த நிலையில்தான் தினேஷின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களை பார்த்துள்ளார் நந்தினி. 

அவன் வேறு ஒரு பெண்ணோடு பழகுவதாக எண்ணிய நந்தினி, அவனைவிட்டு விலகத் தொடங்கியதாகவும் தனது பெற்றோரிடமும் தினேசுடன் திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நந்தினி மீது ஆத்திரத்தில் இருந்த தினேஷ், நந்தினியை சமாதானம் செய்துள்ளார். அவரை சமாதானம் செய்ய தினேஷ் எடுத்த முயற்சிகள் தோல்வி அடையவே, ஆத்திரத்தில் நந்தினியின் கழுத்தை நெறித்தும், அவரது வாயில் விஷத்தை ஊற்றியும் விட்டு தினேஷ் தப்பியோடி தானும் அதே விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான்.

கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தினி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட, அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தினேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். 

From around the web

Trending Videos

Tamilnadu News