நெகட்டிவ் விமர்சனங்களை ஓரங்கட்டிய ஓம் !.. 2ஆம் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கர தோல்விக்கு  பின் வெளியாகியுள்ள படம்  ஓம் .
 
om movie collection

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கர தோல்விக்கு  பின் வெளியாகியுள்ள படம்  ஓம் . அமரன் மாபெறும் வெற்றிக்கு பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் தனுஷ் படத்திற்கு முதன் முறையாக இசையமைத்துள்ளார்.

ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படம் வெளியான பிறகு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, பிரபல திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் ஓம் படத்தின் திரைக்கதையில் நம்பகத்தன்மை இல்லை என்றும், மம்முட்டியின் கதாபாத்திரம் பலவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்திருந்தார். மேலும், வில்லன் யார் என்பதில் தெளிவில்லை என்றும், பல காட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தார். இப்படி படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், மறுபுறம் வசூலில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 இந்நிலையில் ஓம் திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
இதனால், எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் தனுஷின் ஓம் திரைப்படம் வசூலில் வலுவான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

Sai Vikas
Sai Vikas

130 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

Tags

From Around the web