3 மணி நேரம் ஓடும் ஓம்!.. எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டாங்களே!...
அமரன் திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் ராஜ்குமார் பெரியசாமி. அந்த படத்திற்கு பின் தனுஷை வைத்து ஓம் என்கிற திரைப்படத்தை தொடங்கினார். சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்துவதற்காக ஆந்திரா சென்ற தமிழகர்கள் சிலரை ஆந்திர வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஓம் அதன் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை என சொல்லப்படுகிறது. சமீபத்தில் வெளியான டிரெய்லரும் அதை உறுதி செய்தது. இந்த படத்தில் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், உயர் போலீஸ அதிகாரியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார்..
வருகிற 20ம் தேதி ஓம் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. பல காட்சிகள் ஆந்திராவில் நடைபெறுவதால் கிட்டத்தட்ட 30 நிமிட காட்சிகளில் தெலுங்கில் வசனங்கள் வருகிறதாம். மேலும், சமீபத்தில் இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறார்கள். படத்தின் மொத்த நீளம் 2.49 நிமிடம் என்கிறார்கள்.
பொதுவாக 2.30 மணி நேரத்திற்குள் இருந்தால்தான் படம் ரசிகர்களை கவரும். 3 மணி நேரம் என்றால் ரசிகர்களை அது அயர்ச்சி ஆக்கிவிடும். இதை இயக்குனர்கள் புரிந்து கொள்வதில்லை என்கிற விமர்சனம் பல வருடமாக இருக்கிறது. ஆனாலும் ஓம் திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறதாம். இது படத்திற்கு பலவீனமாக அமையுமா? இல்லையா என்பது படம் வெளியான பிறகு தெரிந்துவிடும்..
