பல தியேட்டர்களில் வெளியாகாத ஓம்!.. தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம்....
அமரன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உருவான ஓம் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தனுசுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் கிடைத்து சில வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படத்தின் வெற்றிக்காக தனுஷ் காத்திருக்கிறார். ஆனால் இந்த படம் ஒரு பிரச்சினையை சந்தித்துள்ளது..
லாபத்தை சதவீத அடிப்படையில் பிரித்துக் கொள்வதில் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் உடன்பாடு ஏற்படாததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல திரையரங்குகளில் ஓம் திரைப்படம் இன்று காலை வெளியாகவில்லை..
இந்த பகுதிகளில் 50 சதவீத திரையரங்குகளில் மட்டுமே ஓம் படம் வெளியாகியிருக்கிறது. எப்படியும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டு இன்று காலை திரைப்படம் வெளியாகும் என்ற தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் சென்னையில் ரசிகர்கள் கொண்டாடும் குரோம்பேட்டை வெற்றி மற்றும் கோயம்பேடு ரோகிணி ஆகிய திரையரங்குகளில் கூட ஓம் படம் வெளியாகவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
