Om: தனுஷுக்கு ஹிட் கிடைக்குமா?.. ஓம் படத்தின் முதல் நாள் வசூல் அப்டேட்...

 
om

திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு பின் தனுசுக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. அவரும் பல இயக்குனர்களிடம் பல கதைகளை கேட்டு நடித்து பார்க்கிறார். அவரே கதையை எழுதி இயக்கி இட்லி கடை படத்திலும் நடித்தார் அந்த படமும் ஓடவில்லை. போர்த்தொழில் இயக்கத்தில் நடித்த கர படமும் கைகொடுக்கவில்லை.

இடையில் ராயன் திரைப்படம் மட்டுமே சுமாரான வெற்றியை பெற்றது. கர படத்திற்கு பின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மம்முட்டி, சாய் பல்லவி ஆகியோரோடு இணைந்து தனுஷ் நடித்து ஓம் என்கிற திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி நேற்று உலகமெங்கும் வெளியானது..

ஓம் திரைப்படம் முதல் காட்சி வெளியான பின் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக முதல் பாதி போர், இரண்டாம் பாதீ நீளம்.. சாய் பல்லவிதான் ஹீரோ.. படம் சுமாராக இருக்கு.. ஒருமுறை பார்க்கலாம் என நிறைய விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் நேற்று ஒரு நாளில் ஓம் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.31.55 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் இந்த படம் 20.55 கோடியும். தமிழகத்தில் ரூ.13.35 கோடியும் வசூல் செய்திருப்பதாக

தமிழகத்தில் 13.35 கோடியை இந்த படம் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வருவதால் ஓம் திரைப்படம் தனுசுக்கு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Murugan ..
Murugan ..

5185 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web