×

150 பேர் சார்பாக!.. வடிவேல் பாலாஜிக்கு வடிவேலு இரங்கல்....

 

விஜய் தொலைக்காட்சியின் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 45 வயதாகும் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கேயும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவருக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இவரின் மரணம் செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த வைகைப்புயல் வடிவேலு ‘எனது குடும்பத்தில் 150 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரின் சார்பிலும் பாலாஜியின் மரணத்திற்கு இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News